ஞானசார தேரரின் 6 வருட சிறைத்தண்டனை இன்றுமுதல் அமுல்: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட 6 வருட சிறைத்தண்டனை இன்று (05) முதல் நடைமுறைக்கு வருமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஞானசார தேரர் சிறைச்சாலை அதிகாரிகளால் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு இணங்க, நீதியரசர்களான மயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இரு நீதியரசர்கள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை ரத்து செய்யும் உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரி, சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!