எதிர்காலச் சந்ததியினரின் கல்வி நலனை மேம்படுத்துவதற்காகத் தொடர்ச்சியாகப் பல்வேறு பாரிய கல்விசார் உதவிகளை முன்னெடுத்து வரும் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பிரபல தொழிலதிபரும், ‘தாரணி சுப்பர் மார்க்கெட்’ நிறுவனத்தின் உரிமையாளருமான திரு. சிவஞானம் சிறீகுகன் அவர்கள் மீண்டும் ஒரு உன்னத சமூகப் பணியை முன்னெடுத்துள்ளார்.

கிளிநொச்சி – கிருஷ்ணபுரம் இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த 17 இளம் சாதனையாளர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விமரிசையான நிகழ்விற்கான நிதி அனுசரணையை வழங்கி, மாணவர்களை ஊக்குவித்துள்ளார்.




இவ்விழாவில் சாதனை படைத்த மாணவர்களுக்குப் பெறுமதிமிக்க நினைவுப் பரிசில்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன. தனது தாய்மண்ணின் கல்விக் கண் திறக்கப்பட வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன், தாயகப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காகத் தயங்காது தொடர்ந்து கைகொடுத்து வரும் தொழிலதிபர் திரு. சிவஞானம் சிறீகுகன் அவர்களின் தன்னலமற்ற சமூகப் பற்றிற்குப் பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் உரித்தாக்கியுள்ளனர்.
