ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அக்டோபர் 13 வரை விளக்கமறியல்: கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய நிலையில் இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

‘சிரிலிய சவிய’ அமைப்பின் மூலம் ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலைக்கு சி.டி. ஸ்கேனர் (CT Scanner) இயந்திரம் ஒன்று வழங்கப்படும் எனக் கூறி, அதற்காக தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து10 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்றுக்கொண்டு, அக் குறிப்பிட்ட இயந்திரத்தை வழங்காமல் அந்த அரசாங்கப் பணத்தைக் குற்றவியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தமை மூலம் ஊழல் புரிந்தமை மற்றும் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே அவர்  இன்று (07) முற்பகல் கைது செய்யப்பட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

NamalRajapaksa
30 மில்லியன் ரூபாய் சரீரப் பிணை: நாமல் ராஜபக்ஷவை விடுவிக்கக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு!
RanilWickremesinghe
மனைவியின் பட்டமளிப்பு விழாப் பயணம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!
JaffnaHinduCollege
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் வழக்கில் சமரச முயற்சி: அக்டோபர் 30க்கு ஒத்திவைப்பு!
JeevanThondaman
தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இனவாதம்: மலையக மக்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஜீவன் தொண்டமான் எதிர்ப்பு
Pillayan
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு: பிள்ளையானுக்கு அக்டோபர் 13 வரை மீண்டும் விளக்கமறியல்!
GnanasaraThero
ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 இல் முன்னிலைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை