குருணாகலில் வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம்: 7 வாகனங்கள் பலத்த சேதம்!

குருணாகல், ரஜ பிஹில்ல பூங்கா மற்றும் ரஜ பிஹில்ல விடுதிக்கு இடைப்பட்ட வீதியில் பாரிய மரம் ஒன்று வீதியில் முறிந்து விழுந்துள்ளது.

இன்று (28) காலை 9 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

மரக் கிளைகள் வாகனங்கள் மீது விழுந்தபோதிலும், அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் எவருக்கும் எவ்வித உயிராபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரத்தை அகற்றி வீதிப் போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸாரும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

CycloneArnab
சீரற்ற காலநிலை: இந்தியப் பிராந்தியக் கடலுக்குள் பிரவேசிக்க இலங்கை படகுகளுக்கு அனுமதி
CycloneArnab
அர்னாப் புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றது: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
CustodialDeath
பொலிஸ் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்தி மருத்துவ உதவி மறுக்கப்பட்டதா? இளைஞரின் மரணத்தால் எழுந்த சர்ச்சை!
ArnabCyclone
வலுவடையும் 'அர்னாப்' சூறாவளி: நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் என அறிவிப்பு!
KeheliyaRambukwella
தரமற்ற மருந்து வழக்கு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரை பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
AccidentNews
டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!