திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் வழக்கின் சந்தேக நபர்கள் மூவர் நீதவான் முன்னிலையிலேயே குற்றவாளிக்கூண்டில் வைத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (28) வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே பொலிஸாரால் அழைத்துவரப்பட்ட கைதிகளில் மூவர் உயிர்மாய்க்க முயன்றுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை நிலாவெளிப் பகுதியில் வைத்து சட்டவிரோதமான கைக்குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் திருகோணமலை தலைமையகப் பொலிஸாரினால் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அதில் மூவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பிளேட்டினால் தங்களது கழுத்தைத் தாங்களே அறுத்துக்கொண்டனர். இதன்போது இரத்தம் அதிகளவில் சீறிப்பாய்ந்து பரவியதால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் சட்டத்தரணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

குறித்த மூன்று பேரில் ஒருவரது கழுத்தில் ஏற்பட்ட வெட்டுக் காயம் ஆழமாக இருந்ததால் அதிகளவிலான இரத்தம் வெளியேறி அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸாரும் நீதிமன்ற அதிகாரிகளும் காயமடைந்த மூவரையும் மீட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்துச் சேவைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கைக்குண்டு மற்றும் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

CycloneArnab
சீரற்ற காலநிலை: இந்தியப் பிராந்தியக் கடலுக்குள் பிரவேசிக்க இலங்கை படகுகளுக்கு அனுமதி
CycloneArnab
அர்னாப் புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றது: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
CustodialDeath
பொலிஸ் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்தி மருத்துவ உதவி மறுக்கப்பட்டதா? இளைஞரின் மரணத்தால் எழுந்த சர்ச்சை!
ArnabCyclone
வலுவடையும் 'அர்னாப்' சூறாவளி: நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் என அறிவிப்பு!
KeheliyaRambukwella
தரமற்ற மருந்து வழக்கு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரை பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
AccidentNews
டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!