பிணை கிடைத்தும் நாமலுக்கு விடுதலை இல்லை: தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

சர்ச்சைக்குரிய ‘க்ரிஷ்’ (Krrish) பணப்பரிமாற்றம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இருப்பினும், அவருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள பிற வழக்குகள் சிலவற்றில் பிணை பெறப்படாத காரணத்தால், அவர் தொடர்ந்து விளக்கமறியலிலேயே இருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பு கோட்டை, டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தில் (Transworks Square) உள்ள காணிகளைப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்காக ‘க்ரிஷ்’ நிறுவனத்திற்குப் பரிமாற்றம் செய்வதற்கு வசதி செய்து கொடுத்தமைக்காக, 100 மில்லியன் ரூபாய் லஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நாமல் ராஜபக்‌ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வழக்குத் தொடர்பான பிணை மனு மீதான தீர்ப்பை வழங்குவதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

CycloneArnab
சீரற்ற காலநிலை: இந்தியப் பிராந்தியக் கடலுக்குள் பிரவேசிக்க இலங்கை படகுகளுக்கு அனுமதி
CycloneArnab
அர்னாப் புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றது: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
CustodialDeath
பொலிஸ் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்தி மருத்துவ உதவி மறுக்கப்பட்டதா? இளைஞரின் மரணத்தால் எழுந்த சர்ச்சை!
ArnabCyclone
வலுவடையும் 'அர்னாப்' சூறாவளி: நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் என அறிவிப்பு!
KeheliyaRambukwella
தரமற்ற மருந்து வழக்கு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரை பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
AccidentNews
டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!