முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல்நிலை நேற்று திடீரென மீண்டும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், அவருக்கு சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதையடுத்து, சில வாரங்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அவர், பின்னர் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
