ட்ரம்பிற்கு பின்னடைவு: அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி அதிரடி!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இடைக்கால செனட் தேர்தலுக்கான ஆரம்பகட்ட முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன் அடிப்படையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்து வரும் அதேவேளை ஜனநாயகக் கட்சி முன்னிலையில் இருக்கின்றமை தெரியவருகிறது.

நேற்று செவ்வாய்க்கிழமை (3) இலங்கை நேரப்படி மாலை 5 மணியளவில் தொடங்கிய வாக்குப்பதிவு இன்று அதிகாலையே நிறைவு பெற்றது.

செனட் சபை, பிரதிநிதிகள் சபை என காணப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் சபைக்கு 35 உறுப்பினர்களையும் பிரதிநிதிகள் சபைக்கு 435 உறுப்பினர்களையும் தெரிவுசெய்வதோடு, 36 மாகாணங்களுக்கான ஆளுநர்களையும் தேர்ந்தெடுக்கவும் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்த இரு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருந்துவந்த நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசுக் கட்சிக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளை நோக்குகையில், தற்போது ட்ரம்பின் குடியரசுக் கட்சியை பின்தள்ளி, முன்னிலையில் நிற்கும் ஜனநாயகக் கட்சி அதிக இடங்களை கைப்பற்றினால் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரம் கைமாற அதிக வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

CycloneArnab
சீரற்ற காலநிலை: இந்தியப் பிராந்தியக் கடலுக்குள் பிரவேசிக்க இலங்கை படகுகளுக்கு அனுமதி
CycloneArnab
அர்னாப் புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றது: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
CustodialDeath
பொலிஸ் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்தி மருத்துவ உதவி மறுக்கப்பட்டதா? இளைஞரின் மரணத்தால் எழுந்த சர்ச்சை!
ArnabCyclone
வலுவடையும் 'அர்னாப்' சூறாவளி: நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் என அறிவிப்பு!
KeheliyaRambukwella
தரமற்ற மருந்து வழக்கு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரை பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
AccidentNews
டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!