யாழ். வேலணையில் இருவர் சடலமாக மீட்பு: பின்னணி குறித்து பொலிஸார் விசாரணை

வேலணை – செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இருவரது சடலங்கள் இன்றையதினம் மீட்கப்பட்டன. முத்துலிங்கம் புவனேஸ்வரி (வயது 74) மற்றும் சுப்பிரமணியம் பாலசுந்தரம் (வயது 73) ஆகிய சகோதரர்கள் இருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

அயலில் உள்ளவர்கள், அந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர். இதன்போது அங்கு வந்த பொலிஸார் வீட்டினை அவதானித்தவேளை குற்த்த ஆண் வீட்டுக்கு வெளியே உயிரிழந்து காணப்பட்டதுடன், பெண் வீட்டுக்கு உள்ளே உயிரிழந்து காணப்பட்டார்.

அந்த பெண்ணின் சடலம் உருக்குலைந்து காணப்படுவதுடன், மற்றைய நபர் உயிரிழந்து சுமார் 48 மணிநேரம் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. அவர்களுடன் மாற்றுத்திறனாளி பெண்ணொருவர் வசித்து வருகிறார்.

ஒரு சில தினங்களுக்கு முன்னர் பதிவுகளுக்காக அந்த வீட்டுக்கு சென்ற கிராம சேவகர் குறித்த இருவரையும் விசாரித்தவேளை அவர்கள் உள்ளே உறங்குவதாக மாற்றுத்திறனாளி பெண் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதுடன், சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

TINNumber
நவம்பர் 1 முதல் நிதி, சட்ட நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் கட்டாயம்: உள்நாட்டு இறைவரித் திணைக்களம்!
MotorTrafficDepartment
மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஊழல்: தரவுகளைத் திரட்டும் வலான ஊழல் தடுப்புப் பிரிவு!
YoshithaRajapaksa
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேலதிக சாட்சி விசாரணை ஆரம்பம்!
PoliceCustodyDeath
பொலிஸ் காவலில் சந்தேகநபர் உயிரிழந்த விவகாரம்: இரு சார்ஜன்ட்கள் உட்பட மூவர் சஸ்பெண்ட்
RakithaRajapaksa
விஜேதாச ராஜபக்சவின் மகன் வீட்டை சுற்றிவளைத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு: ரகித்த தப்பி ஓட்டம்?
DrMathurakan
உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய வவுனியா வைத்தியர் மதுரகன்