வெளிநாட்டு மோசடி: யாழில் தலைமறைவான நபருக்கு நீதிமன்றம் செக்!

யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் நபரொருவர் வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவாகியுள்ள நிலையில், அவருக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

யாழ்ப்பாணம் மத்தியூஸ் வீதியைச் சேர்ந்த அந்த நபர் வெளிநாட்டில் வேலைபெற்றுத் தருவதாகக்கூறி பல லட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.

அவருக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியுள்ள நிலையில், அந்த நபர் தனது வசிப்பிடத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து குறித்த நபருக்கு எதிராக கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் தற்போதுவரை அவர் அவர் பொலிஸ் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முன்னிலையாகவில்லை. இதையடுத்தே குறித்த நபரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!