கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கொழும்பு தொழிலதிபர்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கொழும்பைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்ல முயன்ற போது நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்க அதிகாரிகளினாலும், சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினராலும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய தொழிலதிபர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று பிற்பகல் 05.50 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-654 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவர் கொண்டு வந்த பயணப் பைகளுக்குள் பிளாட்டினம் 07 வகையைச் சேர்ந்த 46,800 சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேகநபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!