எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!

லாஃப்ஸ் (Laugfs) எரிவாயு விலை உயர்விற்கு அமைவாக சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாயினாலும், ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலையை 15 ரூபாயினாலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையை அதிகரிக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாயினாலும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 732 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?