வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களைப் பாதுகாக்க காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

தனியாக வசிக்கும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிள்ளைகள் தொழில் நிமித்தம் வேறு இடங்களுக்குச் செல்வது அல்லது வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்வது காரணமாகத் தனியாக வசிக்கும் முதியவர்கள் குற்றச் செயல்களுக்கு இலக்காகும் அபாயம் அதிகரித்துள்ளதாக காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக, போதைப்பொருளுக்கு அடிமையான சிலர் இவ்வாறான வீடுகளை இலக்கு வைத்து பணம், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களைக் கொள்ளையிடுவதாகவும், சில சந்தர்ப்பங்களில் கொலைச் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, முதியவர்களைப் பராமரிப்பதற்காகப் பணியாளர்களை நியமிக்கும்போது அவர்களின் பின்னணியைச் சரிபார்த்து காவல்துறை நற்சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அவசரத் தொலைபேசி இலக்கங்களான 119 மற்றும் 1990 உள்ளிட்ட முக்கிய தொடர்பு இலக்கங்களை வீட்டில் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும் என்றும், தனியாக வசிக்கும் முதியவர்கள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூகக் காவல்துறைக் குழுவினருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அயலவர்களுடன் நல்லுறவைப் பேணுதல், அறிமுகமில்லாதவர்களை அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் வீட்டுக்குள் அனுமதிக்காமை, இரவு நேரங்களில் வீட்டைச் சுற்றி போதிய வெளிச்சத்தை ஏற்படுத்துதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் முதியவர்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டு, நேரில் சென்று பார்வையிடுவதன் மூலம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?