முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் 81ஆவது பிறந்தநாளில் நாமல் வெளியிட்ட விசேட கடிதம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 81ஆவது பிறந்தநாளான இன்று (18), அவரது மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சிறைச்சாலையிலிருந்து விசேட பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தந்தையின் பிறந்தநாளில் அருகில் இருந்து வாழ்த்துகளைத் தெரிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமிருந்து பிரிந்து இந்த இக்கட்டான காலப்பகுதியை எதிர்கொள்ள நேரிட்டாலும், சிறைச்சாலையின் சுவர்களுக்கு அப்பால் தந்தை மீது தனக்குள்ள அன்பும் மரியாதையும் எவ்விதத்திலும் குறையவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

கைகளால் அரவணைக்க முடியாத காரணத்தால் எழுத்துக்கள் ஊடாகத் தனது அன்பை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தமக்குப் பதிலாகத் தனது பிள்ளைகள் இன்று தந்தைக்கு அருகில் இருந்து வாழ்த்துத் தெரிவிப்பார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைமைத்துவம் என்பது வெறும் பதவியை வகிப்பது மாத்திரமன்றி, பொறுப்புகளை ஏற்பது, சவால்களை எதிர்கொண்டு தளராது நிற்பது மற்றும் தான் நம்பும் விடயங்களுக்காகக் குரல் கொடுப்பது என்பதைத் தனது தந்தையின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டதாக நாமல் ராஜபக்ச தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வரலாற்றில் மிகக் கடினமான காலகட்டத்தில் நாட்டுக்குச் சமாதானத்தை நிலைநாட்டத் தந்தை ஆற்றிய அர்ப்பணிப்புகளையும் தியாகங்களையும் ஒரு மகனாகத் தான் நன்கு அறிவதாகவும் அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?