விவாகரத்து வழக்கிற்குப் பின் ஏற்பட்ட மோதலில் கணவன், மனைவி உட்பட மூவர் கைது!

மட்டக்களப்பு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு முன்னிலையானதன் பின்னர் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில், கணவர் தனது மைத்துனர் மீது சிற்றூந்தை ஏற்றுவதற்கு முற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மட்டக்களப்பு காந்தி பூங்கா வாகனத் தரிப்பிடப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விவாகரத்து வழக்கு தொடர்பில் நீதிமன்றத்திற்குச் சென்று திரும்பிய கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், கணவருக்கும் அவரது மைத்துனருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அங்கிருந்தவர்கள் தடுக்க முற்பட்ட போதிலும், கணவர் தனது சிற்றூந்தை மைத்துனரை நோக்கி வேகமாகச் செலுத்தி அவர் மீது ஏற்றுவதற்கு முற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, மைத்துனரால் கணவரின் சிற்றூந்தம் பலத்த சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு காவல்துறையினர், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய கணவர், மனைவி மற்றும் மைத்துனர் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளதுடன், சேதமடைந்த சிற்றூந்தையும் காவல்துறைப் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?