சக மாணவர்கள் மீது தாக்குதல்: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில்

சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள் ஐவர் மீது நேற்று முன்தினம் (19) இரவு சக மாணவர்கள் சிலர் இணைந்து மூர்க்கமாகத் தாக்குதல் நடத்தியதுடன், பிளேட்டினால் (Blade) வெட்டுக் காயங்களையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து காயமடைந்த ஐந்து மாணவர்களும் நேற்று முன்தினம் இரவு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விரைந்து செயற்பட்ட பொலிஸார் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவரையும், பொது இடத்தில் கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 20 பேரையும் என மொத்தமாக 21 மாணவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

வழக்கை ஆராய்ந்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் சந்தேகநபர்களான 21 மாணவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை குழு மோதலில் ஈடுபட்ட ஏனைய மாணவர்களையும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?