இலங்கையில் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அதிக மழைவீழ்ச்சி நிலவும் காலப்பகுதியில் நாட்டின் மத்திய மலைநாட்டில் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் நில அதிர்வுகள் ஏற்படுவது குறித்து நாம் மிகவும் அவதானமாக இருக்கிறோம். இலங்கைக்குள் நில அதிர்வுகள் ஏற்படக்கூடிய ஒரு காரணமாகக் கடந்த நாட்களில் பேசப்பட்டது.

அதிக மழைக்குப் பின்னர் எமது நீர்த்தேக்கங்கள் நீரினால் நிரம்பும்போது, நீர்த்தேக்கங்களுக்குக் கீழே உள்ள பாறை அடுக்குகளில் பாரிய அழுத்தம் ஏற்படுகிறது.

இந்தச் செயற்பாட்டின் காரணமாகப் பாறை அடுக்குகளில் ‘பிளவுத் தளங்கள்’ எனப்படும் ஒரு வகை காணப்படுகிறது. அந்தப் பிளவுத் தளங்களில் சிறிய அளவிலான அசைவுகள் தோன்றுகின்றன.

அந்தச் சிறிய அசைவுகள் ஏற்படும்போது அக்காலப்பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படக்கூடும். இவை கடந்த 5 – 6 ஆண்டுகாலமாக மத்திய மலைநாட்டில் எமக்குப் பதிவாகியுள்ளன.

இலங்கையில் அதிகளவிலான நில அதிர்வு மானிகளைப் பொருத்துமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இதற்கு முன்னர் முழு இலங்கைக்கும் 4 நில அதிர்வு மானிகளே இருந்தன. தற்போது மத்திய மலைநாடு மற்றும் உரிய பிரதேசங்களில் 13 – 14 நில அதிர்வு மானிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் மாத்திரம் ஏற்படும் நிலநடுக்கங்களினாலேயே நாட்டிற்குப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் மொரீஷியஸ் பகுதியில் நேற்று ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 6.5 மெக்னிடுயிட் அளவில் பதிவான நிலநடுக்கம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த நிலநடுக்கமானது இந்திய மற்றும் அவுஸ்திரேலியப் புவித் தட்டுகள் இரண்டாகப் பிரிந்துள்ள இந்தத் தட்டின் மேற்கு எல்லையில், இலங்கையிலிருந்து வெகு தொலைவில் ஆழ்கடலில் ஏற்பட்டுள்ளதால் எமக்குச் சுனாமியோ அல்லது எந்தவொரு ஆபத்தோ ஏற்படுவதற்கு இடமில்லை.

எமக்குப் நிலநடுக்கங்களினால் பாதிப்பு ஏற்படுமாயின், அது ஏற்படக்கூடிய ஒரே திசை கிழக்குப் பிராந்தியத்தில் இந்தோனேசியா, அந்தமான் தீவுகளை அண்டிய ஆழமற்ற கடலுக்கு அருகில் அதிர்வு ஏற்பட்டால் மாத்திரமே சுனாமி ஏற்பட முடியும். அவ்வாறின்றி வேறு எங்கு ஏற்பட்டாலும் ஆபத்தில்லை என தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MahindaRajapaksa
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் 81ஆவது பிறந்தநாளில் நாமல் வெளியிட்ட விசேட கடிதம்!
Canada
கனடா செல்லக் காத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! வெளியான முக்கிய அறிவிப்பு!
ElderlySafety
வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களைப் பாதுகாக்க காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
Meemure
நக்கிள்ஸ் வனப்பகுதி சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி தகவல்!
SivagnanamShritharan
யாழ்ப்பாணத்தில் தொல்.திருமாவளவன் - சிறீதரன் எம்.பி விசேட சந்திப்பு!
ChemmaniMassGrave
ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்து செம்மணியை நோக்கி மக்கள் பேரணி