ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்து செம்மணியை நோக்கி மக்கள் பேரணி

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்தும் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

அரியாலை தபால் கட்டை சந்தியிலிருந்து ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி செம்மணி மனிதப் புதைகுழியை நோக்கி நகர்ந்து செல்கின்றது.

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து பேராசிரியர் ராஜ் சோம தேவா நீதிமன்றுக்கு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகவும், இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டு தமக்கு நீதியை வழங்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது உறவுகள் சித்திரவைதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டு இந்த செம்மணி மனிதப் புதைகுழியிலே புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாக இருக்கலாம் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது ”செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டும்”, “ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்“, “எமது உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்“ ஆகிய கோசங்களை எழுப்பியவாறு பேரணியை முன்னெடுக்கின்றனர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?