பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம்: 23 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

23 மாவட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய அநுராதபுரம், அம்பாறை, களுத்துறை, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், கொழும்பு, கம்பஹா, காலி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கும், நுவரெலியா, புத்தளம், பொலன்னறுவை, பதுளை, மட்டக்களப்பு, மன்னார், கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.

இன்று (25) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.

இதன்படி, குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

MahindaRajapaksa
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் 81ஆவது பிறந்தநாளில் நாமல் வெளியிட்ட விசேட கடிதம்!
Canada
கனடா செல்லக் காத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! வெளியான முக்கிய அறிவிப்பு!
ElderlySafety
வீடுகளில் தனியாக வசிக்கும் முதியவர்களைப் பாதுகாக்க காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
Meemure
நக்கிள்ஸ் வனப்பகுதி சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி தகவல்!
SivagnanamShritharan
யாழ்ப்பாணத்தில் தொல்.திருமாவளவன் - சிறீதரன் எம்.பி விசேட சந்திப்பு!
ChemmaniMassGrave
ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்து செம்மணியை நோக்கி மக்கள் பேரணி