வட மாகாண சுற்றுலாத்துறையின் மைல்கல்: ஆகஸ்ட் 15 முதல் யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட உணவு மற்றும் கலாசார விழா!

வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் “யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா” நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் திகதி முதல், யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் பிரமாண்ட விழா, வட மாகாண சுற்றுலாத்துறையை சர்வதேச அரங்கில் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தின் தனித்துவமான அடையாளங்களை உலகுக்கு எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாகவும் அமையவுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பில் கருத்துத் தெரிவித்த வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஜே.விவேகானந்தன், யாழ்ப்பாணத்தின் தொன்மைமிக்க கலாசாரப் பாரம்பரியம், உலகப் புகழ்பெற்ற சுவைமிகு உணவுகள் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்ணை கடற்கரையையும் யாழ்ப்பாணக் கோட்டையையும் அண்மித்த இயற்கை எழில் சூழ்ந்த முற்றவெளி பண்ணை மைதானத்தில் நடைபெறும் இந்த விழா, வட மாகாண சுற்றுலாத்துறையின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.

வட மாகாணத்தின் சுற்றுலா, கலாசாரம், கைவினை, பாரம்பரிய உணவுகள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தை ஒரே மேடையில் உலகிற்கு வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பாகவும் இந்த நிகழ்வு அமையும் என்றார்.

மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவில் வட மாகாணத்தின் பாரம்பரிய உணவுக் கண்காட்சி, கைவினைப் பொருட்கள் காட்சி மற்றும் விற்பனை, கலாசார மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெறவுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் பொதுமக்கள் என அனைவரையும் இந்தப் பெருவிழாவில் கலந்துகொள்ளுமாறு வட மாகாண சுற்றுலாப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!