உயிரைப் பறித்த போதைப்பொருள் கடத்தல்: சொகுசு பேருந்து சாரதியின் வயிற்றுக்குள் வெடித்த போதைப்பொருள் பாக்கெட்

வயிற்றுக்குள் மறைத்து வைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்து சாரதி ஒருவர், அந்த போதைப்பொருள் பாக்கெட் வயிற்றினுள்ளேயே வெடித்து விஷமாகியதால் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், தெற்கு அதிவேக வீதியின் தங்காலை – மாகும்புர வீதியில் பயணிக்கும் சொகுசு பேருந்து ஒன்றில் பணியாற்றிய, ஓகவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சாரதியாவார்.

கடந்த 8ஆம் திகதி மாகும்புரவிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற பேருந்து, அதன் இலக்கை அடைந்த சில நிமிடங்களிலேயே இந்தச் சாரதி திடீரென கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளார்.

உடனடியாகச் செயற்பட்டு அவர் சிகிச்சைக்காக தங்காலை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (9) தங்காலை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த நபரின் வயிற்றுக்குள் இருந்து போதைப்பொருள் அடங்கிய இரண்டு பாக்கெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வயிற்றிலிருந்த அந்த இரண்டு போதைப்பொருள் பாக்கெட்டுகளில் ஒன்று உடைந்ததால், அந்தப் போதைப்பொருள் உடலின் உட்பகுதியில் இரத்தத்துடன் கலந்து ஏற்பட்ட விஷமே இந்த மரணத்திற்குக் காரணம் என மருத்துவப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை