வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 03கோடிருபாய் பணத்தை மோசடி செய்த சந்தேக நபருக்கு ஹட்டன் நீதிவான் நீதிமன்றம் பிணைவழங்கியுள்ளது. குறித்த சந்தேகம் நபரை நேற்று (28)ஹட்டன் நீதிவான் நீதிமன்றில் ஹட்டன் குற்றவியல் பொலிஸார் முன்னிலைப்படுத்த பட்ட போதே குறித்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இதேவேளை நீதிமன்றத்திற்கு முன்னிலைபடுத்தபட்ட சந்தேக நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தாம் வாங்கிய பணத்தை மீள செலுத்துவதாக ஒப்பு கொண்ட பின்னரே சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் பிரசாத் வீரசேக தெரிவித்தார்.
அதோடு அந்த சந்தேக நபருக்கு எதிராக மேலும் 12முறைப்பாடுகள் காணப்படுவதால் சந்தேக நபர் மேலும் கைது செய்யப்பட்டு நீதிமன்றிற்கு முன்னிலைபடுத்த பட உளாளதாக பொலிஸ் அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டார்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 03கோடி ருபாய் பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் குற்றவியல் பொலிஸாரினால் நேற்று (28) ஹட்டன் குற்றவியல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்
டுபாய் நாட்டில் உணவகம் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோருக்கான வேலைவாய்ப்பு காணப்படுவதாக கூறி ஒரு நபரிடம் இருந்து 12இலட்சம் தொடக்கம் 15இலட்சம் வரையிலான தொகையினை பெற்றுள்ளார். இவர்களிடம் இருந்து சுமார் மூன்று கோடி ருபாய் பணத்தை குறித்த சந்தேக நபர் பெற்றுளாளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்திலும் ஹட்டன் பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்திலும் மொத்தம் 49முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இதில் 12பேர் டுபாய் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்த சம்பவங்களும் பதிவாகியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்
பாதிக்கப்பட்டவர்கள் பொகவந்தலாவ,கொட்டகலை,நுவரெலியா,மஸ்கெலியா,அப்பத்தலை மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.