பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டல்! வெளிநாடொன்றில் பாரிய மோசடி செய்த இலங்கையர்

இலங்கையில் பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறி இத்தாலியில் நபர் ஒருவர் கிட்டத்தட்ட 6,500 யூரோக்கள் மோசடி செய்ததாக இத்தாலிய நன்கொடையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பொருட்களை பெற்றதாக காட்சிப்படுத்தப்பட்ட விலைப்பட்டியல்களை ஆராயும்போது, ​​அதில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களைக் கொண்ட உணவகங்கள் மற்றும் கடைகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களும், பேரிடரால் பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தங்கள் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுமாறு கேட்டு சில சமூக ஊடக ஆர்வலர்கள் விளம்பரங்களை வெளியிட்டிருந்தனர்.

அதற்கமைய இத்தாலியின் நேபிள்ஸில் வசிக்கும் சமூக ஊடக ஆர்வலர், போலி ஆவணங்கள் மற்றும் போலி விலைப்பட்டியல்களைசமர்ப்பித்து 6,500 யூரோக்களுக்கும் அதிகமான பணத்தை மோசடியாக மாற்றியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் போலியானவர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், இலங்கை அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை நேரடியாக வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!