மிளகாய் தூள் பூசப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்: இலங்கையில் நடந்த பயங்கரம்

மினுவாங்கொட, யட்டியான பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு நேற்று மதியம் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மினுவாங்கொட, யட்டியான பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பெண்ணின் உடலில் மிளகாய் தூள் பூசப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், மரணம் நடந்த விதம் குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பஹா மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!