உலகையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து! முதற்கட்ட அறிக்கையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்த 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது.

அதன்படி, விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையைத் தயார் செய்து வெளியிட்டு உள்ளது.

விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு இயந்திரங்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் இயந்திரங்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதனால் விமானம் மேல் எழும்ப முடியாமல் விழுந்து நொறுங்கியுள்ளது.

இதற்கிடையே, அறிக்கையில் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே 2 விமானிகள் பேசிக்கொண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் ”எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள்” எனக் கேட்டுள்ளார். அதற்கு, தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதிலளித்திருப்பதும் விசாரணை அறிக்கையில் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட அறிக்கை வெளியான நிலையில் விசாரணை தொடரும் எனவும் முழுமையான அறிக்கை வெளிவர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்றும் விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (6)
யாழில் நீர் குழாய் புதைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
New Project t (4)
முத்தையன்கட்டு குடும்பஸ்தரின் மரணம்: 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
New Project t (3)
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!
New Project t (1)
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!
New Project t
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
“தமிழ்ல பேசு அம்மா” ஆங்கிலத்தில் பேசிய தாயிடம் அழுது புலம்பிய மகன்!