நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு இதுவரை மின்வெட்டுக்கான வாய்ப்புகள் இல்லை. எதிர்காலத்தில் மின்வெட்டு செய்யப்பட வாய்ப்புள்ளதாக எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் மின்சாரத்தைத் துண்டிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் இதுவரையில் மின்வெட்டு எதுவும் அமல்படுத்தப்படவில்லை என்றாலும் எதிர்காலத்தில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது ஒரு மணிநேரம் கூட மின்வெட்டு செய்யாமல் நாம் நிலைமையை நிர்வகித்து வருகிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால், மின்சாரத்தைத் துண்டிக்க வேண்டிய ஒரு காலம் வரவும் வாய்ப்புள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
