அநுராதபுரத்தில் தொடரும் பதற்றம்: தேரர்களின் சத்தியாக்கிரகம் 3வது நாளாகத் தீவிரம்

ருவான்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித வழிபாட்டுத் தலப் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும், தேரர்கள் உள்ளிட்ட குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று திங்கட்கிழமையும் (09) மூன்றாவது நாளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அநுராதபுரம் புனித நகரத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை சனிக்கிழமை (07) காலை அநுராதபுரம் ருவான்வெலிசாயவுக்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் ஆரம்பித்தனர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த இடத்தில் தற்காலிக கூடாரமொன்றை அமைக்க முற்பட்டதால் அப்பகுதியில் அமைதியற்ற சூழ்நிலையும் ஏற்பட்டது.

இது தொடர்பில் அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்துக்கு விடயங்களை அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, ருவான்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித வழிபாட்டுத் தலப் பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!