“அர்ச்சுனாவின் இனவாதக் கருத்துக்கள் அடிப்படையற்றவை; அரசாங்கம் கலக்கமடையாது” – அமைச்சர் விஜித ஹேரத்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்படும் இனவாதக் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை எனவும், இவ்வாறான நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது எனவும் பதில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன்”நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தைகள் தொடர்பில் அனைவரும் நன்கு அறிவர். எனவே, அவர் முன்வைக்கும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கமோ அல்லது மக்களோ பதற்றமடையத் தேவையில்லை. அவர் கூறுவதை எவரும் கவனத்தில் எடுப்பதுமில்லை. எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அவரால் தெரிவிக்கப்படும் இனவாதக் கருத்துக்களுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை. அவை முற்றிலும் அடிப்படையற்றவை. இவ்வாறான நகைச்சுவையாளர்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது. மக்களும் இவ்வாறான கருத்துக்களை அங்கீகரிக்கப் போவதில்லை” என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் அதிகார சபைக்குச் சென்ற சிவில் அமைப்பினர் – வளாகத்தில் பதற்றம்!
MKSivajilingam
 எம்.கே.சிவாஜிலிங்கத்தின் மறைவு ஈழத் தமிழர் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு –  சிறீதரன் எம்.பி இரங்கல்!
SriLankaJobs
வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் விரைவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள்!
WeatherAlert
குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் புயலாக மாறக்கூடும் என எச்சரிக்கை!
FoodPriceHike
எரிவாயு விலையேற்றத்தைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வு!
LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!