தேசிய மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் !

கொழும்பு தேசிய மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் மருத்துவமனையின் ஊழியர் ஒருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

108 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மருத்துவமனையின் வாகனத் தரிப்பிடத்தை துறைசார் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போதே, குறித்த உந்துருளியில் இருந்து, 5 – T56 ரக துப்பாக்கி ரவைகள் மற்றும் 9 மில்லிமீற்றர் தோட்டாக்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் வெளி நபர்களால் கடத்தப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதா? அல்லது அவை மருத்துவமனையின் ஊழியருக்குச் சம்பந்தப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!