மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்: ‘அர்னாப்’ புயல் குறித்து சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள அர்னாப் (ARNAB) சூறாவளி காரணமாக அந்தப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதோடு, கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (26) காலை 9.30 க்கு வெளியிடப்பட்ட இந்த வானிலை அறிவிப்பு அடுத்த 12 மணி நேரத்துக்கு செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வங்காளவிரிகுடாவின் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து ‘ARNAB’ புயலாக மாறியுள்ளது.

இந்தத் தொகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இன்று இரவு 11.30 அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் வலுவடைந்து தீவிர சூறாவளியாக மாற அதிக வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, குறிப்பிட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

மேலும், அலைகள் 3 முதல் 4 மீற்றர் உயரத்துக்கு எழக்கூடும் என்பதால் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையும்.

இந்த அமைப்பு இலங்கையை நேரடியாகப் பாதிக்காது என்றபோதிலும், இதன் காற்று சுழற்சி தீவு முழுவதும் பரவுவதால் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் எதிர்வரும் சில நாட்களுக்கு மழை அதிகரிக்கக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வட அகலாங்கு 10 முதல் 20 வரையிலும், கிழக்கு நெட்டாங்குக் கோடு 80 முதல் 95 வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முழுமையாகத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே அந்த கடல் பகுதியில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறும், எதிர்வரும் வானிலை அறிவிப்புகளைக் கவனமாகக் கண்காணிக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

CycloneArnab
சீரற்ற காலநிலை: இந்தியப் பிராந்தியக் கடலுக்குள் பிரவேசிக்க இலங்கை படகுகளுக்கு அனுமதி
CycloneArnab
அர்னாப் புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றது: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
CustodialDeath
பொலிஸ் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்தி மருத்துவ உதவி மறுக்கப்பட்டதா? இளைஞரின் மரணத்தால் எழுந்த சர்ச்சை!
ArnabCyclone
வலுவடையும் 'அர்னாப்' சூறாவளி: நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் என அறிவிப்பு!
KeheliyaRambukwella
தரமற்ற மருந்து வழக்கு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரை பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
AccidentNews
டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!