மன்னார், வான்கலை மற்றும் யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் 27 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போதே போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் 121 கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கைதானவர்கள் 19 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.