லண்டனில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு யூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்றையதினம் (23.07.2026) லண்டனில் நடைபெற்றது.

தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம் (TEPAIJ) மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வு, பிற்பகல் 1 மணி முதல் 3மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக (13 Hyde Park Gardens, Tyburnia, London W2 2LU) இடம்பெற்றிருந்தது.

1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தொடங்கி இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.

குறித்த போராட்டத்தில் கறுப்பு நிற ஆடைகள் அணிந்து ஈழதமிழ்மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன், நீதிக்கான கோரிக்கைகளை வெளிப்படுத்தும் பதாகைகளை ஏந்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும், பொறுப்புக்கூறலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!