பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முகத்தில் கேக் பூசியதால் அரங்கேறிய பயங்கரம்!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் புலந்த்சாஹர் மாவட்டம் குர்ஜா நகர் பகுதியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சிறிய தகராறு மூன்று இளைஞர்களின் உயிரைப் பறித்துள்ளது.

நேற்று இரவு ஜீது சைனி என்பவரது பிறந்தநாள் விழா ஜிம் ஒன்றில் நடைபெற்ற போது, அவரது நண்பர்களான அமர்தீப் சைனி, மனீஷ் சைனி மற்றும் ஆகாஷ் சைனி ஆகியோர் விளையாட்டாக ஜீதுவின் முகத்தில் கேக் பூசியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜீது சைனிக்கும் நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறுக்குப் பின்னர் அங்கிருந்து சென்ற ஜீது சைனி, சிறிது நேரத்தில் தனது கூட்டாளிகளுடன் ஏழு துப்பாக்கிகளுடன் மீண்டும் வந்து நண்பர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுள்ளார்.

இதில் மூன்று நண்பர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தடயங்களைச் சேகரித்து வருவதுடன், தலைமறைவாக உள்ள கொலையாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகளை அமைத்துள்ளனர்.

இது ஒரு திட்டமிட்ட கொலை என்று உயிரிழந்த அமர்தீப்பின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்