🔴 VIDEO செம்மணி விவகாரத்தை சர்வதேச நீதிமன்றிற்கு கொண்டு செல்ல வேண்டும் – பிரபல நடிகர் சத்தியராஜ் தெரிவிப்பு!

யாழ்ப்பாணம் – செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும் கோபமாகவும், அதிர்ச்சியை அளிக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது என தென்னிந்திய பிரபல நடிகர் சு.சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து எலும்புக்கூடுகளும் தமிழர்களுடையதாகத்தான் இருக்கும் என்பது அனைவரது ஆணித்தரமான கருத்தும்கூட. ஏனெனில் அந்தப் பகுதியானது யுத்த காலப் பகுதியில் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாக கூறப்படுகிறது. மேலும் அந்த மயானத்தில் கடந்த காலத்தில் சடலங்கள் எரிக்கப்பட்டனவே தவிர புதைக்கப்படுவதில்லை.

அங்கு தாயினதும், சேயினதும், இளைஞர் – யுவதிகளதும் பெரியவர்களினதும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பாடசாலை செல்கின்ற சிறுவன் ஒருவன் புத்தகப் பையுடன் புதைக்கப்பட்டிருக்கின்றான். இவை அனைத்தும் கொஞ்சம் கூட மனிதாபிமானம் அற்ற செயல்.

இந்த செயல்களை செய்தவர்களிடமே நீதியை கேட்டால் அது கிடைக்காது. அதனால் சர்வதேச நீதிமன்றத்திற்கே இந்த பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும். இந்த கொடூரமான செயலை உலக நாடுகள் அனைத்தினதும் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கு தமிழர்களாகிய நாங்கள் தான் பாடுபட வேண்டும்.

சர்வதேச நீதிமன்றத்திற்கு இந்த விடயமாக கொண்டு செல்லப்பட்டு சரியான நீதி கிடைக்க நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

facebook

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (6)
யாழில் நீர் குழாய் புதைத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
New Project t (4)
முத்தையன்கட்டு குடும்பஸ்தரின் மரணம்: 4 இராணுவத்தினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
New Project t (3)
தபால் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் வெளிநாட்டவர்கள் பெரும் பாதிப்பு!
New Project t (1)
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் வீட்டுக்கு முன்னால் திரண்ட பொதுமக்கள்!
New Project t
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
New Project t (11)
“தமிழ்ல பேசு அம்மா” ஆங்கிலத்தில் பேசிய தாயிடம் அழுது புலம்பிய மகன்!