பாலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நால்வருக்கும் மனநலனைப் பரிசோதிக்க உத்தரவு!

அனுராதபுரம் ருவன்வெலிசாய விகாரைக்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாலங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நால்வருக்கும் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நால்வருக்கும் மனநல நிலைமை தொடர்பான அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கான மருத்துவப் பரிசோதனையையும், அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்களா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனையையும் மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நேற்று (12) இரவு மருத்துவமனைக்குச் சென்ற நீதவான், குறித்த நால்வரையும் பார்வையிட்ட பின்னர், அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அனுராதபுரம் புனிதப் பிரதேச அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாலங்கொடை கஸ்ஸப தேரர், நேற்று முன்தினம் முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தையும் ஆரம்பித்திருந்தார்.

இந்தநிலையில், நேற்று காலை மதத்திலிருந்து நீக்கப்பட்ட இராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட குழுவினர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதன்போது ஏற்பட்ட குழப்பநிலைக்கு மத்தியில், இராஜாங்கனை சத்தாரதன தேரரின் தலையில் தடிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனையடுத்து அவர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையைக் கருத்திற்கொண்டு, உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூடாரத்தை அகற்றுவதற்கும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?