மீண்டெழும் இலங்கை: அந்நியச் செலாவணி கையிருப்பில் அதிரடி உயர்வு!

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 7,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.

அண்மைக்கால தரவு அறிக்கைகளின்படி, 2026 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 7,284 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது.

இது 2026 ஜனவரி மாதத்தில் காணப்பட்ட 6,832 மில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 6.6 சதவீத அதிகரிப்பாகும்.

கையிருப்புகளில் முக்கிய அங்கமான வெளிநாட்டு செலாவணி கையிருப்பு, 2026 பெப்ரவரி மாதத்தில் 6,687 மில்லியன் டொலர்களிலிருந்து 7,057 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியிடமுள்ள தங்க கையிருப்பு 2026 பெப்ரவரி மாதத்தில் 109 மில்லியன் டொலர்களிலிருந்து 200 மில்லியன் டொலர்கள் வரை 83.4 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!