அனுராதபுரம், எப்பாவல பகுதியில் சுமார் 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை அதிபர் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினர் டிஸ்னா நிரஞ்சலா குமாரி பதவி விலகியுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவர் மீது தற்போது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பேலியகொட நகர சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.
நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழு கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் தனிப்பட்ட ரீதியில் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், சட்ட நடவடிக்கைகளை ஆதரிப்பதற்கும், நாட்டில் ஒரு நல்ல அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க தேசிய மக்கள் சக்தியால் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கும் அவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதன் நகல் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
