ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கு:நாளை வெளியாகிறது முக்கிய தீர்ப்பு

சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 தற்கொலை குண்டுதாரிகளுக்கு ஆதரவும் அனுசரணையும் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், நெளபர் மௌலவி உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

கொழும்பு சிறப்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கவுள்ளது.

சுமார் 40 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் 35 சிறுவர்கள் உட்பட 274 பேரைக் கொலை செய்தமை மற்றும் 577 பேரைக் காயப்படுத்தியமை தொடர்பில் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராக தனித்தனியாகவும் கூட்டாகவும் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

எனினும், சாட்சி விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் 17ஆவது பிரதிவாதி சிறைச்சாலையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு 24 பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையிலான சிறப்பு ட்ரயல் எட் பார் நீதிபதிகள் குழாமில், நீதிபதிகள் சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் ராமநாதன் கண்ணன் ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜெயசுந்தர மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுதர்ஷன டி சில்வா தலைமையிலான அரச சட்டத்தரணிகள் குழுவினர் முன்னிலையாகியிருந்தனர்.

12 மற்றும் 13ஆம் பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகளான ரவிந்து யசஸ் சமரசிங்க, மகேஷ் ஜெயவிக்ரம மற்றும் நிரோஷன் சிறிவர்தன ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

ஏனைய பிரதிவாதிகள் சார்பில் விமுக்தி ராஜபக்ஷ, கனில் மெத்துமகெ, சதுனி திலீஷிகா, சஞ்சீவ ரூவந்தன பத்திரண உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு முன்னிலையானது.

பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணிகளான சுரினி பெர்னாண்டோ மற்றும் சுரேன் டி. பெரேரா ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!