ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தி அதிகாரம் பெற முயன்றவர்கள் யார்? கத்தோலிக்க சபை கேள்வி!

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் சதித்திட்டம் தீட்டிய மற்றும் அதற்கு உதவி, ஆதரவு வழங்கியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் திருப்தியடைவதாக கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக இந்த வழக்கின் தீர்ப்புக்காக பாதிக்கப்பட்டவர்கள் காத்திருந்ததாகவும், உயிரிழந்த தங்களது பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்காக அவர்கள் நீதியை எதிர்பார்த்ததாகவும் கத்தோலிக்க சபை குறிப்பிட்டுள்ளது.

எனவே, பாதிக்கப்பட்டவர்கள் திருப்தியடையும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தாம் திருப்தியடைவதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்புடன் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துவிட்டதாக கருத முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் அதற்கு உதவி, ஆதரவு வழங்கியவர்களுக்கு அப்பால், இந்தத் தாக்குதலை பயன்படுத்தி அதிகாரத்தைப் பெற முயன்றதாக கூறப்படும் தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் அதிகாரிகளுக்கு போதுமான தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுடன், இந்த விடயம் தொடர்பிலும் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ThilinaGamage
குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நீதித்துறை பதவியிலிருந்து திலின கமகே அதிரடி நீக்கம்!
SriLankaEconomy
இலங்கையின் நுகர்வுச் செலவு 9 இலட்சம் கோடி: 4 இலட்சம் குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி என ஆய்வில் தகவல்!
Vavuniya
புளியங்குளம் விபத்தில் தந்தையும் குழந்தையும் உயிரிழப்பு; தாய் படுகாயம்
TVK
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: த.வெ.க தொடர் முன்னிலை; திமுக - அதிமுக இடையே கடும் போட்டி!
ShiranthiRajapaksa
கண் சிகிச்சைக்காக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ஷ
NavothunneVijithaThero
மெல்பேர்ன் பௌத்த விகாரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: 71 வயதான இலங்கை தேரருக்கு 13 ஆண்டுகள் சிறை!