தமிழ் நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டத்தின் பெரியநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்த 92 வயதான ராதாகிருஷ்ணன், வயது முதிர்வால் உயிரிழந்தார். அவரின் மனைவி சரோஜா (82), கணவரின் மரண செய்தியால் வேதனையுடன் அழுதபடியே மயங்கி விழுந்தார்.

அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உறவினர்கள், மருத்துவ பரிசோதனை செய்த போது, சரோஜா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த சம்பவத்தில், எப்போதும் இணைபிரியாமல் வாழ்ந்த இந்த தம்பதியினர் ஒரே நாளில் உயிரிழந்தது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தையும் உணர்வுப் பூர்வமான மனநிலையையும் உருவாக்கியுள்ளது.