மட்டக்களப்பு நீதிமன்றத் தீர்ப்பு: தமக்கும் குறித்த 8 நபர்களுக்கும் தொடர்பில்லை என ஈ.பி.டி.பி. அறிவிப்பு

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையின் வழிநடத்தலில் செயற்பட்டவர்களோ, கட்சி வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவர்களோ அல்ல என்று தெரிவித்துள்ள கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக. அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று 8 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் எமது கட்சியின் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தவர்கள் கிடையாது.

கடந்த காலங்களில் பல்வேறு போராட்ட இயக்கங்களில் இருந்து பிரிந்தவர்கள் குழுக்களாக எமது பிரதேங்களில் செயற்பட்டுள்ளனர்.

அவ்வாறு புளொட் அமைப்பிலிருந்து பிரிந்து ராசிக் குழுவினருடன் இணைந்து செயற்பட்ட இவர்கள், ராசிக் படுகொலை செய்யப்பட்ட பின்னர் தனியாக செயற்பட்டு வந்தனர்.

இந்நிலையில், 2000 ஆண்டுகளின் நடுப் பகுதியில் எமது மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை பேணியிருந்தனர்.

இந்நிலையிலேயே 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்திற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்த வரையில், எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளிப்படுத்துவது போன்று, சமூக விரோத மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது கட்சியின் கொள்கையோ வேலைத் திட்டமோ இல்லை.

அவ்வாறு ஏதாவது நடைபெறுமாயின் அவை தனிநபர் தவறுகளாகவே இருக்கும். அவற்றை நீதிமன்றங்களின் ஊடாக அணுகப்பட வேண்டும் என்பதும் நீதிமன்ற செயற்பாடுகளை மதிக்க வேண்டும். என்பதே எமது நிலைப்பாடு.

இவ்வாறான செய்திகள் எமது செயற்பாட்டாளர்களையும் ஆதரவாளர்களையும் மக்களையும் சோர்வடைய செய்யக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

LaugfsGas
சமையல் எரிவாயு விலையேற்றத்தை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப சஜித் முயற்சி: சபையில் அமளி!
NanuOya
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 28 பேர் காயம்!
SivagnanamSritharan
வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பாராளுமன்றக் குழு அங்கீகாரம் – சிறிதரன் எம்.பி எதிர்ப்பு!
NamalRajapaksa
கிரிஷ் விவகாரத்தில் நாமலுக்கு வழங்கப்பட்ட பிணை இடைநிறுத்தப்படுமா?
JaffnaNews
உடுவிலில் பிரதேச சபை உறுப்பினர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல்!
BasilRajapaksa
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர்கள்?