புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடிய அகழ்வுப்பணி இன்றையதினம் இடம்பெறுவதற்கான ஆயத்தப்பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தனியார் காணியொன்றில் பதுங்கு குழிக்குள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குறித்த அகழ்வுப்பணிக்கான ஆயத்த பணி இடம்பெற்று வருகின்றது.
புதுக்குடியிருப்பில் புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக கூறி அகழ்வு பணி #a7tvnews #tamilnewslive #a7tvnews #a7tv #swiss #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
Posted by A7tv News on Wednesday, July 9, 2025
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹெரத் தலைமையிலான பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ததற்கு அமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் , கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார் இணைந்து குழியினுள் இருக்கும் நீரினை அகற்றும் பணி இடம்பெற்று வருவதுடன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை ஜேசிபி இயந்திரமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தினை முல்லைத்தீவு நீதவான் பார்வையிட்டதன் பின்னரே அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. இந்நிலையில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் .