அராலியில் குறி சொல்லும் கோவிலுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் உயிரிழப்பு!

குறி சொல்லும் கோவில் ஒன்றுக்கு பிணி தீர்க்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் (29) உயிரிழந்துள்ளார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த செல்வராசா ஜெசிந்தன் (வயது 31) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் உடல் சுகயீனமற்று காணப்பட்ட நிலையில் அராலி மத்தியில் உள்ள குறி சொல்லும் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த சாமியார் அவரது பிணியை போக்குவதாக கூறி இளநீர் ஒன்றினை வழங்கியுள்ளார்.

அந்த இளநீரை குடித்த சிறிது நேரத்தில் குறித்த குடும்பஸ்தர் மயக்கி விழுந்துள்ளார். அதன்பின்னர் அவசர நோயாளர் காவு வண்டி வரவழைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துவிட்டு நோயாளர் காவு வண்டி திரும்பிச் சென்றது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த வட்டுக்கோட்டை பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

செய்தி – பு.கஜிந்தன்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

New Project t (3)
வெளிநாட்டவர் ஒருவரை நடனமாடி வரவேற்ற ஊழியர்கள்: வைரலான வீடியோவால் வலுக்கும் கண்டனம்
New Project t (1)
நாடாளுமன்றில் கடும் குழப்பம்: சபாநாயகரை "வாயை மூடுங்கள்" என கூறிய எதிர் கட்சியின் பெண் எம்.பி!
New Project t
மூளாய் பகுதியில் தொடரும் பொலிஸ் பாதுகாப்பு! மேலும் மூவர் அதிரடிக் கைது!
Jaffna TID
யாழில் ரி.ஐ.டியினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்
kundu0
86 கைக்குண்டுகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது
New Project t (4)
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொலைக் களமாக? - போராட்டத்தில் குதித்த மக்கள்!