மகன் தாக்கியதில் தந்தை உயிரிழப்பு!

மாத்தளை பகுதியில் மகன் தாக்கியதில் தந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கூர்மையான ஆயுதத்தால் தாக்கித் தந்தையைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் மாத்தளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) காலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியதாலேயே, மகன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் அதிரஹபிட்டிய பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய மகனே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!