ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கான நேரக் கட்டுப்பாடு: மக்களுக்குப் பொலிஸார் அவசர அறிவுறுத்தல்

பொது வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதிக்கப்பட்ட கால எல்லைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொது மக்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் விசேட நினைவூட்டலை விடுத்துள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள சட்டவிதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையகத்தின் அறிவிப்பின்படி, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான நேரக் கட்டுப்பாடுகள் பின்வருமாறு அமையும்.

அனுமதிக்கப்படும் நேரம்

  • திங்கள் முதல் வியாழன் வரை: காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • வெள்ளி மற்றும் சனிக்கிழமை: இந்த தினங்களில் நள்ளிரவைத் தாண்டி அதிகாலை 1:00 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி நீடிக்கப்பட்டுள்ளது.
  • ஞாயிற்றுக்கிழமை: நள்ளிரவு 12:30 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்.

பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் அமைப்பாளர்கள் மற்றும் தனிநபர்கள், இந்த நேரக் கட்டுப்பாடுகளைக் கண்டிப்புடன் பின்பற்றுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்தும் கண்ணியமான முறையில் நிகழ்வுகளை முன்னெடுக்குமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Namal and Mahinda
"18ஆவது திருத்தம் நாங்கள் செய்த தவறு; அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம்!" - நாமல் ராஜபக்ச
police arrest
தெஹிவளை உணவகக் கொள்ளை: முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவருக்குக் கடூழிய சிறை!
negombo prison
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: நீர்கொழும்பு சிறை அதிகாரி சாட்சியத்தை வெளியிட நீதிமன்றம் தடை!
telegram
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை: ரஷ்யா அதிரடி நடவடிக்கை!
accident
A9 வீதியில் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி: இரு இளைஞர்களின் உயிரைப் பறித்த சோகம்!
pillayan
'பிள்ளையான்' தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு: விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு!