தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல, சாலை விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.’

சமூக ஊடகங்களில் சிலர் விபத்து நடந்த நேரத்தில் அவர் குடிபோதையில் இருந்ததாக பல்வேறு கூற்றுக்களை வெளியிட்டனர், ஆனால் விசாரணைகளில் அவர் குடிபோதையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
சாலை விபத்துக்குப் பிறகு, அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
