தப்பியோடிய இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் எவ்வாறு கைது செய்யப்பட்டார்? வெளியான தகவல்!

கனேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து பேர் நேபாளத்தில் கைது செய்துள்ள நிலையில், அவர்களை நாடு கடத்தி இலங்கைக்கு அழைத்து வர சட்ட அமுலாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் (CID) இன்ஸ்பெக்டர் கீஹான் சந்திம மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒளுகல ஆகியோரின் தலைமையில், நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த விசேட நடவடிக்கையின் போதே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

சந்தேகநபர்கள் காத்மண்டுவில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பல மாடி வீட்டில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர்.

செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டவர்களில், ஜே.கே. பாய் எனவும் அழைக்கப்படும் கென்னடி பஸ்தியன் பிள்ளை என்பவரும் அடங்குவார். இவர் கொலைக்குப் பிறகு செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாக நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட குழுவில் கம்பஹா மற்றும் நுகேகொடவைச் சேர்ந்தவர்களும், அத்துடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினரும் அடங்குவதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

கனேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி 19 ஆம் தேதி, இலக்கம் 5 கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை இஷாரா செவ்வந்தி வழங்கியதாகவும், சம்பவம் நடந்த உடனேயே துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் செவ்வந்தி தப்பிச் சென்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்தது.

சந்தேகத்தின் பேரில் துப்பாக்கிச் சூடு நடத்திய சமிது டில்ஷான், மறுநாளே கைது செய்யப்பட்டார்.

கொலைக்குப் பிறகு, செவ்வந்தியைத் தேடும் பணி கொழும்பு குற்றப் பிரிவு, விசேட அதிரடிப் படை மற்றும் ஏனைய பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் ஜே.கே. பாய் உதவியுடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றது கண்டறியப்பட்டது.

இதேவேளை இந்தோனேசியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஐந்து முக்கிய நபர்களான — கேஹல்பத்தார பத்மே, பாணந்துறை நிலங்க, கமாண்டோ சலிந்த, பேக்ஹோ சமன், மற்றும் தம்பிலி லஹிரு — ஆகியோர் ஆகஸ்ட் 27 ஆம் தேதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டனர். மேற்கு ஜகார்த்தாவின் எபோன் ஜெருக் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் வைத்து இந்த கைதுகள் நடந்தன.

இந்தோனேசியாவில் நடந்த நடவடிக்கையை உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான ரோஹன் ஒளுகல மற்றும் மஹிந்த ஜயசுந்தர ஆகியோர் தலைமை தாங்கினர். இவர்கள் ஆகஸ்ட் 23 முதல் இரகசியமான மற்றும் சவாலான ஒரு பணியை மேற்கொண்டு வந்தனர்.

எல்லை தாண்டிச் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலையமைப்புகளுடன் தொடர்புபட்டதாக நம்பப்படும் சந்தேகநபர்களை வெற்றிகரமாகக் கைது செய்வதில் அவர்களின் முயற்சிகள் உச்சக்கட்டத்தை அடைந்தன.

சட்டப்பூர்வமான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேகநபர்களை விரைவாக நாடு கடத்துவதற்கு இலங்கை பொலிஸார் தற்போது சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Karu Jayasuriya
முன்னாள் சபாநாயகர் ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம்!
docter
மக்களை ஏமாற்றிவந்த போலி மருத்துவர்: சுற்றி வளைத்த அதிகாரிகள்
t20
யாழ்ப்பாணம் வருகிறது T20 உலகக்கிண்ணம்!
colombo
இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!
Singer S
பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் காலமானார்!
vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு!