ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்த தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (24) ஒரே நாளில் இரண்டு தடவைகள் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று ஒரு பவுண் 24 கரட் தங்கம் 365,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், இன்று காலை 5,000 ரூபாயால் உயர்ந்து 370,000 ரூபாயாகக் காணப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 5,000 ரூபாயால் அதிகரித்து 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 375,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுத் தேவை அதிகரிப்பு காரணமாக தங்கத்தின் விலையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்