சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் தடவையாக 5,500 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.
இன்று (ஜனவரி 29) காலை வர்த்தக நேரத்தின் போது இந்த அதிரடி உயர்வு பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் வீழ்ச்சி, சர்வதேச அரசியல் பதற்றங்கள் (குறிப்பாக அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் போக்கு) மற்றும் மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்கக் கொள்வனவு ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இதேவேளை அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையேற்றம் இன்று ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்று அதன் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 420,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 52,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,088 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
