தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, அதற்கு இணையாக உள்நாட்டு தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.

இன்றைய (12) நிலவரப்படி உலக தங்க விலை 4,266 டொலராக அதிகரித்துள்ளது.

உள்நாட்டு தங்க விலை நேற்றுடன் (11) ஒப்பிடுகையில் இன்று (12) 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

அதற்கமைய, இன்று காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் “22 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை 312,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் இதன் விலை 309,200 ரூபாவாக காணப்பட்டது.

இதேவேளை, நேற்று 336,000 ரூபாவாகக் காணப்பட்ட “24 கரட்” தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று 339,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

police
பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொண்டுசெல்லப்படும் பொருட்கள்: கொள்ளையடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!
namal
நாடாளுமன்றத்தை கூட்டுமாறு நாமல் கோரிக்கை
weather
சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
rain
நாளை முதல் தீவிரமடையும் மழை: வளிமண்டலவியல் திணைக்களம்
flood
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
lightning
பலத்த மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!